திங்கள், 2 ஜூன், 2014

வந்தவாசி கோட்டை - மறைக்கப்படும் வரலாறு - கோ.ஜெயக்குமார்.

வந்தவாசி கோட்டை - மறைக்கப்படும் வரலாறு - கோ.ஜெயக்குமார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது.
படிமம்:Fort - Vandavasi.jpg
இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லால்லி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது.
படிமம்:One Part of Vandavsi Fort.jpg
கோட்டை வாயிலில் ஒரு கல்வெட்டு. அக்காலத்தில் போரில் பயன்படுத்திய ஒரு பீரங்கி. இவைதான் மின்னிய வரலாற்றின் எஞ்சிய மிச்சங்கள். அவ்வப்போது இந்தக் கோட்டை இடிபாடுகளுக்குள் பீரங்கிக் குண்டுகள், போர்வாள் மற்றும் கருவிகள் கிடைப்பதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டுபிடித்து, பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் ஆய்வுத்துறையோ பெயரளவுக்குக்கூட அகழ்வாராய்ச்சி எதையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

கோட்டைக்கு நாம் சென்றிருந்த போது கூட வந்த பொதுமக்கள் சில கற்குண்டுகளைக் காட்டினார்கள். கருங்கல்லால் ஆன இந்தக் குண்டுகளே அந்தக் காலத்தில் பீரங்கியில் பயன்படுத்தப்பட்டனவாம். நாற்பதுக்கும் மேற்பட்ட குண்டுகளை நாம் பார்த்தோம். இதுபோல இன்னும் நூற்றுக்கணக்கானவை இருக்கின்றன என்கிறார்கள். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் பன்னிரெண்டு அடி நீளம் கொண்ட பீரங்கி ஒன்று இங்கு காணக் கிடைத்ததாகவும் சொல்கிறார்கள்.

வந்தவாசிக் கோட்டையிலிருந்து செஞ்சி, ஆற்காடு போன்ற அக்காலத்துக் கோட்டைகளுக்கு சுரங்கவழி இருப்பதாக ஒரு நம்பிக்கை. தெற்கே பேருந்து நிலையம் தொடங்கி, வடக்கே ஏரிக்கரை வரை ஒரு காலத்தில் கம்பீரமாக வீற்றிருந்த கோட்டை இன்று ஓர் ஒற்றைச்சுவர், ஒரு கண்காணிப்புக் கோபுரம் மட்டும் மிஞ்சி பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோட்டையில் இன்று பத்து சதவிகிதம் கூட இல்லை. கோட்டையின் மூலைப்பகுதி குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. அரசு அதிகாரிகளோ எந்த அக்கறையும் செலுத்துவதாகத் தெரியவில்லை. சென்னை மாநகர் உருவாகக் காரணமாக இருந்த கோட்டை, இன்று மரணத்தின் விளிம்பில் நிற்கிறது.

பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிப்பிடத்திலிருந்தும், கடைகளிலிருந்தும் கழிவுநீர் சிற்றாறாய் ஓடி, கோட்டை அகழியில் சங்கமமாகி கூவத்தை மிஞ்சும் கழிவுநீர்ப்பெருங்கடலாய் மாறுகிறது. தெரு நாய்களுக்கும், பன்றிகளுக்கும் வேடந்தாங்கல் இந்த அகழி. அகழிப்பகுதியை ஒட்டி ஏராளமான குடிசைவாசிகள்.

அங்கே  பகுதி மக்களுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமே போகிறது இந்தக் கழிவுநீர்க் குட்டையால்தான்" என்று குற்றம் சாட்டுகிறார். இப்பகுதி பள்ளி மாணவர்கள் இந்தக் கழிவுநீர்க்குட்டையை தாண்டித்தான் தினமும் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

இந்தக் கழிவுநீர்க் கலப்பால் பல ஆண்டுகளாக வந்தவாசி மக்களின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்துவந்த கோயில் குளத்து நீர் மாசுபட்டிருப்பதுதான் உச்சபட்ச அவலம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன.

இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லால்லி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது.

வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே.
VANDAVASI TEMPLE
 மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக