வெள்ளி, 29 நவம்பர், 2013

தமிழக முதல்வர்கள் - கோ.ஜெயக்குமார்.

தமிழக முதல்வர்கள் - கோ.ஜெயக்குமார்.
புனித ஜார்ஜ் கோட்டை இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவில் கட்டிய முதலாவது பிரமாண்ட கோட்டை என்ற பெயரைக் கொண்டது. 1639ம் ஆண்டு அப்போதைய மதராஸில் இது கட்டப்பட்டது. இந்தக் கோட்டைதான் சென்னைப் பட்டணத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மூல வேராகும். இந்த கோட்டையை மையமாகக் கொண்டுதான் சென்னை மாநகரம் வியாபித்து வளர ஆரம்பித்தது.
 
கிழக்கிந்திய கம்பெனியினராக உள்ளே நுழைந்த வெள்ளையர்கள், மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர்.
புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது.
 
இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது.
இந்தக் கோட்டைதான் தமிழக சட்டசபையாக இத்தனை நாள் ஓய்வின்றி பணியாற்றி வந்தது.
 
தமிழகத்தின் முதல் சட்டசபையானது 1921ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்று பெயர். அதன் ஆயுள் காலம் 3 ஆண்டுகளாகும். அதில் மொத்தம் 132 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 34 பேர் ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். மற்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த சட்டமன்றம் முதல் முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில், 1921ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி கூடியது. கன்னாட் கோமகன் இதை தொடங்கி வைத்தார். 1921ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஆளுநர் கவுன்சிலில் உரையாற்றினார்.
 
இதுதான் தமிழகத்தின் முதலாவது சட்டசபையாகும். அதன் பின்னர் 1923ல் 2வது சட்டசபை, 1926ல் மூன்றாவது சட்டசபை உருவானது. நான்காவது சட்டசபை 1930ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கூடியது. 
 
1935ம் ஆண்டு சட்டசபை மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் கண்டது. இந்த ஆண்டில் சட்டசபையின் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் 1952ம் ஆண்டு சென்னை மாநில சட்டசபையின் உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. இதில் 243 தொகுதிகள் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகும். மீதுள்ள 62 தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாகும்.
 
1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி மொழி வாரி அடிப்படையில் சென்னை மாநிலம் பிரிக்கப்பட்டு, தெலுங்கு பேசும் பகுதிகள் ஹைதராபாத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவானது. கன்னடம் பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்தோடு இணைக்கப்பட்டு கர்நாடகம் உருவானது.
 
இதனால் சென்னை மாநிலத்தின் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆக குறைந்தது. பின்னர் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மலபார் பகுதி கேரளாவோடு இணைந்தது. இதனால் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 190 ஆனது.
பின்னர் சென்னை மாநிலத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக அதிகரிக்கப்பட்டது. 
 
சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த சட்டசபை 1957ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த அவையில் 205 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் ஒரு நியமன உறுப்பினரும் இருந்தனர்.
 
1959ம் ஆண்டு ஆந்திராவில் இருந்த சில பகுதிகள் தமிழகத்திற்கு வந்தன. இதையடுத்து ஒரு சட்டசபை உறுப்பினர் தொகுதி கூடியதால் சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்தது.
 
1961ம் ஆண்டு 38 இரட்டை உறுப்பினர் தொகுதிகள் நீக்கப்பட்டன. இதேபோல தனித் தொகுதிகளும் சீரமைக்கப்பட்டன. இருப்பினும் உறுப்பினர் எண்ணிக்கை 206 ஆகவே இருந்தது.
1962ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்றாவது சட்டசபை அமைந்தது. அப்போதும் 206 தொகுதிகள்தான்.
 
1965ம் ஆண்டு தொகுதிகளின் எண்ணிக்கை சீரமைக்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டது. இதில் 42 சீட்கள் தாழ்த்தப்பட்டோருக்காகவும், 2 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்காகவும் ஒதுக்கப்பட்டது. ஒரு நியமன உறுப்பினர்.
 
1967ல் நான்காவது சட்டசபை அமைந்தது. இந்த சட்டசபையின் ஆயுள் காலம் மிகப் பெரிய முக்கிய நிகழ்வை சந்தித்தது. அதாவது இந்த சட்டசபையில்தான் சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றும் சரித்திரப் புகழ் பெற்ற தீர்மானத்தை அறிஞர் அண்ணா கொண்டு வந்தார்.
1965ம் ஆண்டு முதல் தமிழக சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 234 ஆகவே நீடித்து வருகிறது.
 
ஐந்தாவது சட்டசபை 1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைந்தது.
இந்த சட்டசபை 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது அதுதான் முதல் முறையாகும்.
 
1977ம் ஆண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடந்து ஜூன் 30ம் தேதி 6வது சட்டசபை அமைந்தது. இந்த சட்டசபை 1980ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.
 
1980ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி 7வது சட்டசபை அமைந்தது.
8வது சட்டசபை 1985ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அமைந்தது. இது முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கும் முன்பாக, 1988ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கலைக்கப்பட்டது.
 
இந்த சட்டசபையின் பதவிக்காலத்தில் இன்னொரு முக்கிய நிகழ்வு அரங்கேறியது. அது சட்ட மேலவையை ஒழிக்கும் முக்கிய முடிவாகும். 1986ம் ஆண்டு மே 14ம் தேதி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் 1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மேலவைக் கலைப்பு அமலுக்கு வந்தது.
 
சென்னை மாகாணமாக தமிழகம் இருந்தபோது 1937ம் ஆண்டு சட்ட மேலவை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1986ம் ஆண்டு முதல் தமிழக சட்டசபை ஓரவை கொண்டதாக மாறியது.
 
9வது சட்டசபை 1989ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்தது. இதுவும் முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கும் முன் 1991ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.
 
10வது சட்டசபை 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி அமைந்தது. இது 1996ம் ஆண்டு முன்கூட்டியே கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை சந்தித்தது.
11வது சட்டசபை 1996ம் ஆண்டு மே 13ம் தேதி அமைந்தது. இந்த சட்டசபையும் முன்கூட்டியே 2001ம் ஆண்டு கலைக்கப்பட்டது. பின்னர் 2001 மே 14ம் தேதி 12வது சட்டசபை அமைந்தது.
 
தற்போதைய 13வது சட்டசபை 2006ம் ஆண்டு மே 13ம் தேதி அமைந்தது. முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார்.
 
முதலமைச்சர்கள் பட்டியல்...
சென்னை மாகாணாமாக இருந்து, சென்னை மாநிலமாக மாறி தற்போது தமிழ்நாடு என்று உருவெடுத்துள்ள தமிழகம் கடந்த காலங்களில் 33 முதல்வர்களைக் கண்டுள்ளது. இவர்களில் தமிழ்நாடு என்று பெயர் மாறிய பின்னர் பதவியேற்ற முதல்வர்களின் எண்ணிக்கை மட்டும் 14 ஆகும். இன்று 

தமிழகத்தில் முதல்வர் பதவியை அலங்கரித்த பெருமக்கள்...
சென்னை மாகாணம்...
1. ஏ. சுப்பராயலு (17 டிசம்பர், 1920 11 ஜூலை, 1921)
2. பனகல் ராஜா (11 ஜூலை, 1921 3 டிசம்பர், 1926)
3. பி. சுப்பராயன் (4 டிசம்பர், 1926 27 அக்டோபர், 1930)
4. பி. முனுசுவாமி நாயுடு (27 அக்டோபர், 1930 4 நவம்பர், 1932)
5. ராமகிருஷ்ண ரங்காராவ் (5 நவம்பர், 1932 4 ஏப்ரல், 1936)
6. பி. டி. இராஜன் (4 ஏப்ரல், 1936 24 ஆகஸ்டு, 1936)
7. ராமகிருஷ்ண ரங்காராவ் (24 ஆகஸ்டு, 1936 1 ஏப்ரல், 1937)
8. கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (1 ஏப்ரல், 1937 14 ஜூலை, 1937 1)
9. சி. இராஜகோபாலாச்சாரி (14 ஜூலை, 1937 29 அக்டோபர், 1939)
10. தங்குதுரை பிரகாசம் (30 ஏப்ரல், 1946 23 மார்ச், 1947)
11. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (23 மார்ச், 1947 6 ஏப்ரல், 1949)
சென்னை மாநிலம்...
1. பி. எஸ். குமாரசுவாமிராஜா (26 ஜனவரி, 1950 9 ஏப்ரல், 1952)
2. சி. இராஜகோபாலாச்சாரி (10 ஏப்ரல், 1952 13 ஏப்ரல், 1954)
3. கே. காமராஜ் (13 ஏப்ரல், 1954 31 மார்ச், 1957)
4. கே. காமராஜ் (13 ஏப்ரல், 1957 1 மார்ச், 1962)
5. கே. காமராஜ் (15 மார்ச், 1962 2 அக்டோபர், 1963)
6. எம். பக்தவத்சலம் (2 அக்டோபர், 1963 6 மார்ச், 1967)
7. சி. என். அண்ணாத்துரை (6 மார்ச், 1967 ஆகஸ்டு, 1968)
தமிழ்நாடு...
1. சி. என். அண்ணாத்துரை (ஆகஸ்டு, 1968 3 பிப்ரவரி, 1969)
2. நாவலர் நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்) (3 பிப்ரவரி, 1969 10 பிப்ரவரி, 1969)
3. மு. கருணாநிதி (10 பிப்ரவரி, 1969 4 ஜனவரி, 1971)
4. மு. கருணாநிதி (15 மார்ச், 1971 31 ஜனவரி, 1976) குடியரசுத் தலைவர் ஆட்சி - (31 ஜனவரி, 1976 30 ஜூன், 1977)
5. எம். ஜி. ராமச்சந்திரன் (30 ஜூன், 1977 17 பிப்ரவரி, 1980)
குடியரசுத் தலைவர் ஆட்சி (17 பிப்ரவரி, 1980 9 ஜூன், 1980)
6. எம். ஜி. ராமச்சந்திரன் (9 ஜூன், 1980 15 நவம்பர், 1984)
7. எம். ஜி. ராமச்சந்திரன் (10 பிப்ரவரி, 1985 24 டிசம்பர், 1987)
8. நாவலர் நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்) (24 டிசம்பர், 1987 7 ஜனவரி, 1988)
9. ஜானகி ராமச்சந்திரன் (7 ஜனவரி, 1988 30 ஜனவரி, 1988)
குடியரசுத் தலைவர் ஆட்சி (30 ஜனவரி, 1988 27 ஜனவரி, 1989)
10. மு. கருணாநிதி (27 ஜனவரி, 1989 30 ஜனவரி, 1991)
குடியரசுத் தலைவர் ஆட்சி (30 ஜனவரி, 1991 24 ஜூன், 1991)
11. ஜெ. ஜெயலலிதா (24 ஜூன், 1991 12 மே, 1996)
12. மு. கருணாநிதி (13 மே, 1996 13 மே, 2001)
11. ஜெ. ஜெயலலிதா (14 மே, 2001 21 செப்டம்பர், 2001)
12. ஓ. பன்னீர்செல்வம் (21 செப்டம்பர், 2001 1 மார்ச், 2002)
13. ஜெ. ஜெயலலிதா (2 மார்ச், 2002 12 மே, 2006)
14. மு. கருணாநிதி (13 மே, 2006 முதல்)
சபாநாயகர்கள் பட்டியல்...
சிவசண்முகம் பிள்ளை (6.5.1952 - 16.8.1955)
என்.கோபால மேனன் (27.9.1955 - 1.11.1956)
டாக்டர் யு.கிருஷ்ணா ராவ் (30.4.1957 - 3.8.1961)
எஸ்.செல்லப்பாண்டியன் (31.3.1962 - 14.3.1967
சி.பா. ஆதித்தனார் (17.3.1967 - 12.8.1968)
புலவர் கே.கோவிந்தன் (22.2.1969 - 14.3.1971
கே.ஏ.மதியழகன் (24.3.1971 - 2.12.1972)
புலவர் கே.கோவிந்தன் (3.8.1973 - 3.7.1977)
முனு ஆதி (6.7.1977 - 18.6.1980)
கா.ராசாராம் (21.6.1980 - 24.2.1985)
பி.எச்.பாண்டியன் (27.2.1985 - 5.2.1989)
டாக்டர் மு.தமிழ்க்குடிமகன் (8.2.1989 - 30.6.1991)
சேடப்பட்டி ஆர்.முத்தையா (3.7.1991-21.5.1996)
பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (23.5.1996 - 21.5.2001)
டாக்டர் கா. காளிமுத்து (24.5.2001 -1.2.2006)
ஆர்.ஆவுடையப்பன் - (19.5.2006 முதல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக