செவ்வாய், 30 ஜூலை, 2013

மகாபலிபுரம் தலசயனப்பெருமாள் கோ.ஜெயக்குமார்.

மகாபலிபுரம் தலசயனப்பெருமாள் கோ.ஜெயக்குமார்.

மூலவர் : ஸ்தலசயனப்பெருமாள்
உற்சவர் : உலகுய்ய நின்றான் 
அம்மன்/தாயார் : நிலமங்கைத் தாயார் 
தல விருட்சம் : புன்னை மரம் 
தீர்த்தம் : புண்டரீக புஷ்கரணி 
விமானம் : கனகாகிருதி விமானம் 
ஆகமம்/பூஜை : - பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 
புராண பெயர் : திருக்கடல் மல்லை 
ஊர் : மகாபலிபுரம் 
http://photos.wikimapia.org/p/00/03/10/32/80_full.jpg
சென்னைக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் மகாபலிபுரத்தில் இந்த திவ்ய தேசம் அமைத்துள்ளது. இது மாமல்லாபுரம், கடல்மல்லை, தல சயனம், அர்த்த சேது என்னும் பெயர் கொண்டு விளங்குகிறது. இது திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதி. 

புண்டரீக முனிவர் தாமரை மலர்களைக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனை வழிபட வேண்டும் என்று எண்ணியவராய்க் கூடை நிறையப் பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தார். 
http://media.dinamani.com/2013/05/12/ther.jpg/article1587147.ece/alternates/w460/ther.jpg
அவர் செல்லும் போது கடலானது வழியடைத்துக் கொண்டு இருப்பதைக் கண்ட முனிவர் பத்தி மேலீட்டால் கடல் நீரைக் கைகளால் இறைத்து விடலாம் என்று எண்ணி அவ்வாறே செய்யலானார். முனிவரின் பக்தியை மெச்சிய பெருமாள், முதியவர் வேடம் கொண்டு தனக்கு ஆகாரம் கொடுக்குமாறு கேட்டார். 
http://photos.wikimapia.org/p/00/03/10/32/09_full.jpg
முனிவர் ஆகாரம் கொண்டு வரச் சென்றதும் இறைவன் திருவனந்தான் மேல்சயனம் கொண்டுள்ள கோலத்தில் கூடையில் இருந்த தாமரை மலர்களைச் சாத்திக் கொண்டு சேவை சாதிக்கலானார். இத்திருக்காட்சியைக் கண்ட முனிவர் பேரானந்தம் அடைந்தவராய் எம்பெருமாள் திருப்பாதத்தருகில் அமரும் பாக்கியத்தை அருளும்படி வேண்டினார். 
http://mmimages.maalaimalar.com/Articles/2012/Aug/577b47e1-0e0e-4dce-85cf-a781c6f2a929_S_secvpf.gif
பெருமாள் அவ்வாறே முனிவருக்கு அருளினார். இங்குப் பெருமாள் தரையில் ஆதிசேடன் மீது சயனித்தும், புண்டரீக முனிவர் திருவடியின் அருகில் கைகூப்பிய நிலையில் காட்சி தருகிறார். பூதத்தாழ்வார் இத்தலத்தில் மல்லிகை வனத்தில் உள்ள நீலோத்பலமலரில் தோன்றியவர். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY3Z-Kc9uWi3vdM1luBregx9WHdn8qqgFEyE7mypbUNt2HAR7gIdd26R3irrkNyaTjB-iF3S0ZuVUCHcjRj_Te4YS9c28tMkE6_zF54rcZDeQ9EY16LJ9H9CsSaHigh_JP7JSSZsp6Vfxj/s400/99009999+Thalasayana_Perumal.jpg
பெருமாள் இங்கு ஞானப்பிரான்- வலவெந்தை என அழைக்கப்படுகிறார். இங்குப் பல்லவர்களின் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கலைச்சின்னங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை) இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான இந்து வைணவ கோயிலாகும்.
இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள்(தமிழில் தரைகிடந்த பெருமாள்) என வழங்கி வருகின்றது.
இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் திருக்கடல்மல்லை தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
இத் தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
http://media.dinamani.com/article1479353.ece/alternates/w460/c25cglmasi.jpg
இந்தத் திருக்கோயிலை நடுவண் அரசின் தொல்லியல் துறை கையகப்படுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.[1]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக