சனி, 1 ஜூன், 2013

புதுக்கோட்டை – அபர்ணா கொலை
புதுக்கோட்டை மாணவியை கற்பழித்து கொலை செய்த பயங்கரம் !...
உள்ளூர் போக்கிரி கும்பல் திட்டம் போட்டு செய்தது அம்பலம் !...
உண்மைகளை மூடிமறைப்பதாக கூறி கொதித்தெழுந்த மக்கள் !..
=========
நவீன உலகில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள், வருப்போகும் விபரீதம் தெரியாமல் பல குற்றங்களை செய்கின்றனர். அந்த குற்றங்களை மூடி மறைக்க அரசியில் மற்றும் அதிகாரிகளின் ஆதரவை நாடி வழக்கை விசாரிக்கும் போலீசாரையே தங்கள் வலையில் வீழ்த்திய சம்பவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
பள்ளி ஆசிரியர் பணியாற்றும் தம்பதிகளின்  15 வயது மகள் ஒருவரை உள்ளூரை சேர்ந்த மர்ம கும்பல் பட்டபகலிலேயே வீட்டில் புகுந்து அநியாயமாக கற்பழித்து கொலை செய்துள்ளனர். உண்மையை மூடி மறைக்க வீட்டில் இருந்த லட்சக்கணக்கான நகை பணத்தை கொள்ளையடிதுள்ள கொடிய சம்பவத்தின் உண்மையையும் அதன் பின்னணியையும் இப்போது பார்ப்போம்.
புதுக்கோட்டை, சத்தியமூர்த்தி நகர், ஏழாவது தெருவில் கலைக்குமார் மற்றும் ராஜம் தம்பதிகள் வசித்து வந்தனர். ஆசிரியர்களாக பணியாற்றும் இவர்களுக்கு அபர்ணா என்ற பதினைந்து வயது மகளும், நிஷாந்த் என்ற ஆறு வயது சிறுவனும் உள்ளனர்.
கலைக்குமார் புதுக்கோட்டை ஸ்ரீபிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், அவரது மனைவி ராஜம் சந்தைப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர். இருவரும் தனித்தனியாக் வாடகை ஆட்டோக்களில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய தங்கள் மகள் அபர்ணாவை புதுக்கோட்டையில் உள்ள  ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைத்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் அபர்ணாவிற்கு மாலைநேர சிறப்பு வகுப்புகள் நடப்பது வழக்கம். இதற்காக மகளுக்கு தனியாக ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்திருந்தனர்.
கலைக்குமாரின் மனைவி ராஜத்திற்கு ஆட்டோ ஓட்டும் சாகுல்ஹமீது அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த ராஜம் சாகுல்ஹமீதை பலமுறை இப்படி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவரிடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
இதனால், கொதித்துப்போன சாகுல்ஹ மீது ராஜம் குடும்பத்தாரை பயங்கரமாக மிரட்டியுள்ளான். இந்நிலையில், மறுநாள் ராஜம் பள்ளிக்குச் சென்றுவிட்ட நிலையில், மகள் அபர்ணா மட்டும் தம்பி நிஷாந்துடன் வீட்டிலேயே இருந்துள்ளார்.
அப்போது, ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கரமான ஆயுதங்களுடன், கலைக்குமாரின் வீட்டுக்குள் புகுந்துள்ளது. ஆனால், வீட்டில் கலைக் குமாரின் குழந்தைகள் மட்டுமே இருந்தததைக் கண்டு செய்வதறியாமல் ஒருகணம் திகைத்தனர்.
அப்போது, இளம் பருவத்தில் அழகாக இருந்த அபர்ணாவை கண்டதும் அந்த கயவர்களுக்கு புத்தித்தடுமாறியது. உடனே, அந்த கும்பல் அபர்ணாவை பலாத்காரம் செய்ய முயன்றனர். இந்த செயலால் அதிர்ந்துப்போன சிறுமி அபர்ணா செய்வதறியாமல் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார்.
அப்போது, தன் சகோதரியை தாக்கும் கயவர்களை தடுக்க முயற்சித்த 6 வயது சிறுவன் நிஷாந்தையும் அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் பலமாக காலால் உதைத்து கீழே தள்ளினான்.
இந்த கொடூர கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு, அந்த கும்பல் பாதி உயிர் போன நிலையில் இருந்த சிறுமி அபர்ணாவை கேபிள் ஒயரால் கட்டி தூக்குலிட்டு கொன்றுள்ளனர். அதன் பின்னர், பீரோவை திறந்து அதிலிருந்த 25 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது அந்த கும்பல்.
நடந்த கொடூரத்தை அறிந்த அபர்ணாவின் பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். அங்கு தங்கள் மகளின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவம் புதுக்கோட்டை நகரையே அச்சத்தில் உறையவைத்தது.  

தங்கள் மகளின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் யார் என்று தெரியாமல் திகைத்த ஆசிரியர்களான கலைக்குமாரும், ராஜமும் கதறிய காட்சிகள் கல் நெஞ்சையும் கறைத்தது.
ஆனால், மர்ம கும்பலின் கொடூர தாக்குதலில் மூர்ச்சையாகி இருந்த அவர்களது மகன் நிஷாந்த் கொலை கும்பலில் இருந்த இருவரை மட்டும் அடையாளம் காட்டியுள்ளான்.
அந்த இருவர் வேறுயாரும் இல்லை. தினமும் ஆசிரியர் குடும்பத்திற்கு ஆட்டோ ஓட்டுபவர்களான முகமது ஹனீபாவும், சாகுல் ஹமீதும் என்பதுதான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைக்குமார் தம்பதிகள் உடனே கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை உடனே சம்பவ இடத்திற்கு வந்து அபர்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது, மருத்துவமனைக்கு வந்த ஒரு திமுக பிரமுகர் காவல்துறை அதிகாரி ஒருவரை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்தவுடனே காவல்துறையினர் அபர்ணாவின் உடலை உடனே எரித்துவிடவேண்டும் என்று கலைக்குமார் குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் பயந்துபோன கலைக் குமார் மகளின் உடலை எரித்துள்ளார்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனர்களான முகமது ஹனீபாவும், சாகுல் ஹமீதும், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தனின் மகன்கள் கவிவேந்தன், இசைவேந்தன் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளரின் மகன் வெளிச்சி என்கிற சரவணன் ஆகியோர்கள் கூட்டாக இணைந்து பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஆசிரியை ராஜத்திடம் ஆட்டோ ஓட்டுனராக சேர்ந்த சாகுல் ஹமீது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இந்த மிரட்டல்களுக்கு ஆசிரியை பயப்படாததால் அவர் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினான் சாகுல் ஹமீது.
சம்பவத்தன்று, கலைக்குமார் வீட்டுக்கு வந்த இந்த கும்பல் சிறுமி அபர்ணாவை சீரழித்து கொன்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கலைக்குமார் மேலும் ஒரு புகாரை காவல்துறை கண்காணிப்பாளர் முத்துசாமியிடமும் அளித்துள்ளார்.
இப்படி தன் மகளின் வாழ்க்கையை பறித்தவர்களை கலைக்குமார் அடையாளம் காட்டியும் காவல்துறை அவர்களை கைது செய்யாமல் வழக்கை இழுத்தடிப்பதிலேயே குறியாய் இருந்திருக்கிறார்கள். மேலும், ஏற்கனவே திட்டம் போட்டு மகளின் சடலத்தை எரித்து ஆதாரங்களை அழிப்பதற்கு காவல்த்துறையினர் முயன்றுள்ளது தெரியவருகிறது.
இப்படி, தங்கள் மகளின் வழக்கில் காவல்துறை அலட்சியமாக இருப்பதை பொறுக்க முடியாத கலைக்குமார் 2011-இல் இருந்தே முதல்வர், செயலாளர், அமைச்சர், ஆட்சியர், காவல்துறை என்று அதிகார வர்க்கத்தின் அனைத்து கதவுகளை தட்டி நீதி கேட்டுள்ளார்.
ஆனால், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பல பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து சிறுமி அபர்ணாவின் கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டு என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்களும் இந்த வழக்கை பல தரப்பிலிருந்து வரும் அரசியல் நெருக்கடி காரணமாக இழுத்தடிப்பதிலேயே கவனமாக இருப்பதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் என்று ஆலங்குடி நீதிமன்றத்தில் மூன்று பேர் சரணடைந்துள்ளார்கள். ஆனால், இவர்கள் பொய் குற்றவாளிகள் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சிறுவன் நிஷாந்த் அடியாளம் காட்டிய உண்மை குற்றவாளிகளான சாகுல் ஹமீதையும், முகமது ஹனீபாவையும் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் வெளிச்சியையும், முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. கவிதைபித்தனின் போக்கிரி மகன்களான கவிவேந்தன், இசைவேந்தன் ஆகியோரை கைது செய்யாமல் இருப்பதன் பின்னணி என்ன, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், பிரேத பரிசோதனையின் போது கொலைக்கான ஆதாரங்களை அழிக்க மருத்துவமனைக்கு வந்த அந்த தி.மு.க. பிரமுகர் யார் என்றும், அவரை பற்றிய உண்மைகளை போலீசார் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களான கலைக்குமார் ராஜம் தம்பதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
அப்பாவி பள்ளி மாணவியான அபர்ணாவை கற்பழித்து கொலை செய்துவிட்டு, நகை பணத்தை கொள்ளையடித்து உள்ளூர் போக்கிரி கும்பலுக்கு துணைபோகும் அதிகாரிகளை கடுமையாக தண்டிப்பதோடு, உண்மைகளை மூடி மறைக்கும் குற்றத்திற்காக அனைவரையும் கைது செய்து கூண்டுலேற்றவேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம்.
========
  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக